பெர்லினில் இராணுவ மரியாதையுடன் சீன பிரதமர் லி கியாங்கை ஜெர்மனி ஜனாதிபதி Olaf Scholz, வரவேற்றுள்ளார்.
பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீன பிரதமர் லி கியாங் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று ஜேர்மனி ஜனாதிபதியுடன் வர்த்தகம், பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைனில் நடக்கும் யுத்தம் குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் சீன ஜனாதிபதியை சந்தித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சந்திப்பு இடமபெற்றுள்ளது.
இது மேற்கத்திய நாடுகளுடன் மீண்டும் தொடர்புகளையும் உறவுகளையும் கட்டியெழுப்பும் சீனாவின் முயற்சியாக பார்க்கப்படுகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விமர்சிக்க மறுத்த மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடன் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஜேர்மனி எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.