நியூசிலாந்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் கட்டார் வீரரினால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்து, நியூசிலாந்து அணியின் சக வீரர்கள் கட்டாருக்கு எதிரான காற்பந்துப் போட்டியைப் பாதியில் புறக்கணித்துள்ளனர்.
நியூஸிலாந்து மற்றும் கட்டார் அணிகளுக்கு இடையே கடந்த 19 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற நட்பு ரீதியான காற்பந்து போட்டியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் போது சமோவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் மைக்கேல் போக்சாலை, கட்டார் வீரர் ஒருவர் இனரீதியாக விமர்சித்ததாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இது குறித்து நடுவரிடமும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் நடுவர் இதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் அதிருப்தி அடைந்த நியுசிலாந்து வீரர்கள் இரண்டாம் பாதி ஆட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப் போட்டியில் நியூஸிலாந்து 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ ;
Here is a televised look of the incident as it took place between New Zealand and Qatar…pic.twitter.com/CSsNNKouMf
— Men in Blazers (@MenInBlazers) June 19, 2023