மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் திணிப்பது பாரதூரமான நிலை.போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் அதன் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.