இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் விலை உயர்வு, மருந்துகளின் ஊடாக மோசடி, ஊழல் என ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டு நோயுற்ற மக்களின் வாழ்வோடு விளையாடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.