அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கான திருமண உதவி திட்டமும் 5 லட்சம் முதியோருக்கான உதவித் தொகையையும் திமுக அரசாங்கம் நிறுத்திவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியை திமுக அரசு மேற்கொள்ளவில்லை எனவும், எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் முயற்சிக்கிறார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறு தமிழ்நாட்டை காப்பற்ற முடியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.