இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டு பருவக்காலத்திற்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான தொலைக்காட்சி உரிமத்தை SBC தொலைக்காட்சி பெற்றுள்ளது.
அதன்படி, இவ்வருடம் இடம்பெறும் 4 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை கொழும்பில் UHF 29, தெனியாய UHF 56, நுவரெலியா UHF 60, ஹந்தான UHF 60, மாத்தளை UHF 56 மற்றும் யாழ்ப்பாணம் UHF 42 ஆகிய SBC தொலைக்காட்சியின் அலைவரிசைகளின் ஊடாக கண்டுகளிக்கலாம்.
இதேவேளை, LPL கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒலிபரப்புச் செய்வதற்கான வானொலி உரிமத்தை தமிழ் FM பெற்றுள்ளது. அதன்படி, LPL கிரிக்கெட் தொடரின் ஒவ்வெரு போட்டிகளின் முழுத் தகவல்களையும் 99.5 மற்றும் 99.7 ஆகிய தமிழ் FM வானொலி அலைவரிசையில் எப்போதும் எங்கும் கேட்கலாம்.
இதேவேளை, இலங்கை இரசிகர்களையும் தாண்டி உலக இரசிகர்களையும் ஈர்த்துள்ள லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான தொடரில் பாபர் அசாம், ஷகிப் அல் ஹசன், டேவிட் மில்லர் போன்ற பிரபல சர்வதேச நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ளை அவுரா, காலி டைட்டன்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் பி-லவ் கண்டி ஆகிய ஐந்து அணிகள் மோதவுள்ளனன. இதுவரை நடைபெற்று முடிந்த குறித்த தொடரின் மூன்று போட்டிகளிலும் லைக்காவின் யப்னா கிங்ஸ் அணி மகுடம் சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.