லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 148 ஒட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கொழும்பு அணி 57 ஓட்டங்களை பெற்றவேளை பெத்தும் நிசங்க ஆட்டமிழந்து வெளியேற தொடர்ந்து பாபர் அசாம் 9 ஆவது ஓவரின் முதலாவது பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த நுவணிந்து பெர்னாண்டோ அதே ஓவரில் ஆட்டமிழக்க 10 ஆவது ஓவரின் இறுதி பந்தில் இப்திகார் அஹமட் ஆட்டமிழந்து வெளியேற கொழும்பு அணி 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
தொடர்ந்து வந்த லஹிரு உதார 29 ஓட்டங்களுடனும் 18.4 ஓவரில் நாஸும் வெளியேற இறுதி ஓவரில் ரமேஷ் மெண்டிஸ், நசீம் ஷா ஆகியோர் ஆட்டமிழக்க கொழும்பு அணி 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிஸங்க 36 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், டில்ஷான் மதுஷங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன, நுவான் துசார மற்றும் சொயிப் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இன்னமும் சில நிமிடங்களில் 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.