சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று விவாதத்தின் பின்னர் மாலை 5.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு இடம்பெற்ற வாக்கெடுப்பில் கிடைத்த எண்ணிக்கையை விட 21 வாக்குகள் குறைவாகவே இன்று அளிக்கப்பட்டிருந்தது.