சுகாதார துறையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் அவர்களை சேவையில் இணைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் சேவையை விட்டு வெளியேறியதாலும் வெளிநாட்டு பயிற்சிக்கு என சென்றவர்கள் நாடு திரும்பாததாலும் பல அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறை காணப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் முழுமையாக மீளாத நிலையில் இந்த நிலைமை மேலும் தொடரும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.