உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் கணிப்பின்படி, பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு அடுத்தபடியாக ஸ்விட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 40 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10வது இடத்திலும் இருப்பதாக அந்த கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட் 22 உலகத் தலைவர்களை வைத்து நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவலகள்; வெளியாகி உள்ளன.