ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் உள்ள ஹெராத் மாகாணத்தில் 6 புள்ளி 3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து மூன்று முறை சக்தி வாய்ந்த அளவிலும் அதைத் தொடர்ந்து 5 முறை மிதமான அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால்இ ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன.
இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 320 பேர் உயிரிழந்தனர். சிறுவர்கள்இ பெண்கள்இ முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.