பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில், கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பேரணியாக காந்திபூங்காவரை சென்ற, போராட்டக்காரர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டங்களை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்றும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.
இப் போராட்டத்தில் முன்னாள் பிரதேச மற்றும் மநாகரசபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.