காசா பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட ஆரம்பித்துள்ள நிலையில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
காசா மீது கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்படும் தீவிரமான குண்டு தாக்குதலில் 970 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2.2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நிலம், கடல் மற்றும் வான்வழி ஊடான முற்றுகைக்கு மத்தியில் எங்கும் செல்ல வழியின்றி வாழ்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.