பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி, நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இதன்போது ”தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்தவும், இரு நாட்டு மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் ” என்றும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இரட்டைப் போக்கை கடைபிடிக்க வேண்டாம் எனவும் போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் இந்த பிரச்சனையில் சர்வதேச நீதிமன்றம் விரைவில் தலையிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.