எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகளை வழங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றதொரு நிலைமைக்கு நாடு தள்ளப்படாமல் தடுப்பது தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சவால்கள் இருந்தபோதிலும் நாட்டுக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திறம்பட அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.