தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்திக்கு இணையான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை மானிய விலையில் வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை, இலவங்கப்பட்டை, தென்னை உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களுக்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா உரக் கம்பனியும் வர்த்தக உரக் கம்பனியும் தற்போது விசேட கலப்பு உரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த உரமானது தேயிலை பயிர்ச்செய்கைக்கு மிகவும் ஏற்றது எனவும், தேயிலை கைத்தொழிலுக்கு மானிய விலையில் உரம் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இதன்படி தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை தமது உற்பத்திகளின் விலைக்கே வழங்குவதற்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.