Lanka E-Mobility Solutions (Private) Limited (LeMS) நிறுவனமானது `e-wheel’ என்ற வரித்தகநாமத்துடன் முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கையில் 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் பயன்பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் பயனாக முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவர் செலவுமிக்க பேட்டரியை கொள்வனவு செய்யவோ அல்லது பேட்டரியின் பாவனைக்காலம் முடிவடைந்த பின்னர் அதற்குப் பதிலாக புதிய பேட்டரியொன்றை மாற்றுவது தொடர்பிலோ கவலைப்படத் தேவையில்லை எனவும், வெறும் 2 மணித்தியாலங்களுக்குள்ளேயே பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமட்டுமல்லாது பெட்ரோலினால் இயங்கும் முச்சக்கரவண்டியொன்றை e-wheeler ஆக மாற்றும் போது, பேட்டரிகளுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் உரிமையாளர் மேற்கொள்ளத் தேவையில்லை எனவும் LeMS நிறுவனம் தனது உரிமையாண்மையின் கீழ் பேட்டரியை பேணி முகாமைத்துவம் செய்வதுடன், பேட்டரி மாற்றல் நிலையங்களையும் இயக்குகின்றது எனவும் பாவனையாளர்கள் நீங்கள் நுகரும் எரிசக்தியின் அடிப்படையில் (pay-as-you-go) மாத்திரமே e-wheeler உரிமையாளர் ஒருவர் எரிசக்திக்கான கொடுப்பனவை செலுத்த வேண்டி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைபேணத்தகு போக்குவரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், காபன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ஆபத்தான வளி மாசடைதலுக்கு எதிராகப் போராடுதல் ஆகியவற்றுக்கான அவசர தேவையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை இதன் ஸ்தாபகர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் தினந்தோறும் 5.5 மில்லியன் லீட்டர் பெட்ரோலை நுகர்கின்றது. எனினும் ‘e-wheel” உம் இந்த தொகையை குறைக்க உதவும். குடும்பத்தின் செலவுகளை கவனிப்பதற்காக பெரும்பாலும் ஒரே உழைப்பாளராகவுள்ள e- wheel ஓட்டுனர், வெறும் ரூபா 450,000 முதலீட்டுடன் மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபா 20,000 தொகையை தற்போது சேமிக்க முடியும்,” என்று LeMS இன் முகாமைத்துவப் பணிப்பாளரான சமிந்த ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார்.
“எரிபொருள் இறக்குமதி, மசகு எண்ணெய் வகை மற்றும் வழக்கமான பேணல் பராமரிப்பு உதிரிப்பாகங்கள் ஆகிவற்றுக்காக செலவு செய்யும் பெறுமதிமிக்க அந்நிய செலாவணியை சேமிப்பதால் நாட்டுக்கு கிட்டும் நன்மைகள் அளப்பரியவை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.