பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக ”மீண்டும் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படுமே?” என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ”மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது” என மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் தொடர்ந்து நீர்மின்சாரம் உற்பத்தி செய்து மின்சாரம் வழங்கப்படும் எனவம் மின்சார சபை அறிவித்துள்ளது.