சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா வெளியிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பேசிய அவர், இலங்கை அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நாட்டில் நடத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் போது இலங்கை வீரர்களுக்கான கொடுப்பனவுகள் வழமை போன்று தொடரும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் தடையின் விளைவாக, இலங்கை சுமார் 100 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.