நேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த சமூகத்தின் உரிமைக்கான வெற்றி என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மாயா குருங் (35) மற்றும் சுரேந்திர பாண்டே (27) என்ற தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
ஒரே பாலினத்தவர்களுக்கான திருமணங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த திருமணம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.