வேகமான மற்றும் பல பயண சேவைகளை கொண்டுவரும் முனைப்போடு ரயில்வே துறையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக வடக்கு இங்கிலாந்து ரயில்வேக்கு 4 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மான்செஸ்டர், ஹடர்ஸ்ஃபீல்ட், லீட்ஸ் மற்றும் யோர்க் இடையே டிரான்ஸ்பென்னைன் பாதை மேம்படுத்தலுக்காக பிரித்தானிய அரசாங்கம் 3.9 பில்லியன் பவுண்டகளை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது.
வடக்கு நகரங்களை ரயில் மூலம் இணைக்கும் திட்டம் மற்றும் 50 நிலையங்களை இணைக்கும் திட்டங்களுக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் ரிஷி சுனக் முன்னதாக உறுதியளித்திருந்தார்.
இந்த மேம்படுத்தல் நடவடிக்கையானது கிழக்கு-மேற்கு இணைப்பை வழங்குவதற்கான முதல் படி என்றும் அடுத்த கட்டதிற்கு செல்ல இந்த நிதி உதவி பயனளிக்கும் என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.