செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்களுக்கு எதிராக இன்று நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். கார்னி கப்பல்களில் இருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளித்து அதற்கு உதவி வழங்கியதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் கடல் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை பிரதிபலிக்கின்றன என்றும் அமெரிக்க மத்திய கட்டளை குறிப்பிட்டுள்ளது.
ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள் ஈரானால் செயல்படுத்தப்பட்டவை என்பதற்கான அனைத்து காரணங்களும் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது.
யூனிட்டி எக்ஸ்ப்ளோரர் மற்றும் நம்பர் ஒன்பது ஆகிய இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே பொறுப்பேற்றுள்ளனர்.