வடக்கில் மாவீரர் தினதிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் சீறுடைக்கு ஒத்த சீறுடைகளை சிறுவர்களுக்கு அணிந்தமையானது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவீனங்கள் குறித்த நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
இதேநேரம் அரசியலமைப்பின் சமவுரிமை, பெண் சமத்துவம் தொடர்பில் பேசப்படுகிற போதும் பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் பெண்களுக்கு சமவுரிமை இப்போதும் வழங்கப்படுவதில்லை என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.