உணவின்றி இருப்பவர்களிடம் இருந்து வரியை அறவிடுவதற்கு பதிலாக வரி செலுத்தக்கூடியவர்களிடம் இருந்து வரியை அறவீட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அரச வருவாய் அவசியம் என்றாலும் பணவீக்கச் சுமையை சாதாரண மக்களே எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.
எனவே அரச வருமானம் 45 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அதில் 56 வீதமான வருமானத்தை வட் வரி மூலம் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் அவசியம் என்றபோதும் வட் வரி சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு கருத்து தெரிவிக்க அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.














