திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரைவாளர்களால் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு ஒக்டோபர் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதன்படி, 2024 ஜனவரி முதல், வரிக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை வருடத்திற்கு 80 மில்லியன் ரூபாயிலிருந்து 60 மில்லியன் ரூபாயாகக் குறைப்பதற்காக வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தச் சட்டத்தின் மூலம் பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.