சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் சுமார் 3 மாத காலமாக நீடிக்கும் நிலையில் இந்தபோரில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகின்றது.
அதேநேரம் பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் இன்றி பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில் உலக நாடுகள் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதற்கமைவாக ஐ.ந சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு 153 நாடுகள் பொர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.
போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும் உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவளித்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்தநிலையில் சார்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்பட்டால் அது ஹமாஜட பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசாக அமைந்துவிடும் என்றும் அவர்கள் மீண்டும் இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் விடுவதற்கு அனுமதி வழங்கியது போன்றாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று இடம்பெறவுள்ளது.