உர மானியத் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியதாக 7 நிறுவனங்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த 7 நிறுவனங்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பல்வேறு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மோசடி சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், குறித்த 7 நிறுவனங்களின் வங்கிப் பதிவேடுகளை வரவழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.