ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி மேலதிக செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதில் எந்தவொரு பயனும் கிடையாது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான குறித்த சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.