சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விசாரணையின் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான பதில்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோசடி தொடர்பாக வழக்குத் தொடர்வதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 12 நிறுவனங்களில் தடயவியல் தணிக்கையை நடத்தி 6 நிறுவனங்களில் இருந்து பெற்ற இலாபத்தில் 31 கோடி ரூபாவை மீட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சீனி வரி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.