19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒருநாள் உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 6 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டியில் இந்தியாவின் இளையோர் அணி 214 ஓட்டங்களினால் அபார வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்தது.
இதனை அடுத்து 296 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் 81 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதேநேரம் உலகக்கிண்ண தொடரின் 26 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை குவித்தது.
தொடந்து 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இதேநேரம் மற்றுமொரு சூப்பர் 6 போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.
நெற்றியை போட்டிகளின் முடிவை அடுத்து சூப்பர் 6 குழு ஒன்றில் இந்தியா அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளோடு முதலிடத்திலும் பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதேநேரம் சூப்பர் 6 குழு இரண்டில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பிடித்துள்ளன.