வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிதாக பதவியேற்றுள்ள இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதேவளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இந்திய புதிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டமைக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்திய மீனவர்கள் பிரச்சினை, சீனாவின் வருகை மூலமான கடலட்டை பண்னை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம், இந்து சமூத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்பானது அவசியமாகும். எனவே சீனா இலங்கையில் வந்து நிலைகொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு , புதிய தூதுவருடனான இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாகவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.