ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டின் எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் உடல் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர ரஷ்யாவிற்காகப் போராடிய தனது கணவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கொன்றுவிட்டதாக அலெக்ஸி நவல்னியின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் அலெக்ஸி நவல்னிக்கு பொது இடத்தில் அஞ்சலி செலுத்திய 400 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.