இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
192 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 67 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ரஞ்சியில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ஓட்டங்களை பெற்றது.
தொடந்து பதிலுக்கு தனது முதலாவது இனிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ஓட்டங்களை குவிக்க 46 ஓட்டங்கள் முன்னிலையோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இனிங்ஸில் விளையாடியது.
நேற்றைய 3 ஆம் நாளின்போது இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



















