”பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர அது கட்சியின் நிலைப்பாடல்ல” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார், ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஸ்தாபிக்கப்படும் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.
சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.