ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் பயணித்த விமானம் விபதுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிச்சியாக கழிப்பதற்காக, அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஸ்பெயினின் தெற்கு பகுதியிலுள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதன்படி, தலைநகர் மாட்ரிட்டில் (madrid) இருந்து சிறிய ரக விமானம் மூலம் பயணித்த அவர்கள், புறப்பட்ட சிறிது நேரத்தில் குறித்த விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்த மீட்பு படையினர் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிரதமர் தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.
சம்பவம் குறித்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ள விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறால் விமானத்தின் என்ஜின் செயலிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.