சந்தையில் வெற்றிலையின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சராசரி அளவு வெற்றிலையின் விலை தற்போது 300 ரூபாயை எட்டியுள்ளது.
சிங்களப் புத்தாண்டு காலம் வருவதால் வெற்றிலை விற்பனை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு வெற்றிலை விநியோகம் பாரிய பிரச்சினையாக இருக்கும் என வெற்றிலை விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.