“வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ள அதேவேளை இன்று பிற்பகல் ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்வுகள் கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியிருந்ததுடன் இரவு 7 மணி தொடக்கம் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசதுறை, திறந்த துறை மற்றும் விருந்தினர் துறை ஆகிய 03 பிரிவுகளின் கீழ் பல போட்டிகள் இடம்பெற்றன.
அனைவரும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் வழங்கியிருந்தார்.
புத்தாண்டு விழா நடைபெறும் இடத்திற்கு இன்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்த மக்களுடன் சிநேகபூர்வவமாக கலந்துரையாடியதுடன் சில போட்டிகளையும் பார்வையிட்டார்.
அத்துடன், கிராமிய வீடு மற்றும் மருத்துவ வீட்டுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி, அவற்றை பார்வையிட்டதுடன், அவற்றை கண்டுகளிக்க வந்திருந்த வெளிநாட்டவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கௌரவ அதிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“வசத் சிரிய 2024” இசை நிகழ்ச்சி இன்று இரவு 7.00 மணிக்கு குறித்த வளாகத்தில் நடைபெறவுள்ளது