யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது
யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்
ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார்
இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்