உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையிலேயே தற்போது ”உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென” ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.