இந்திய – அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் – ஜெய்சங்கர் உறுதி!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலேசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த கலந்துரைடல் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாகவும், இரு நாடுகளும் இணைந்து செயற்பட உறுதியேற்றுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.