அமெரிக்க பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்ட் வழங்கும் திட்டம் ஒன்றை
நடைமுறைபடுத்தவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் குடியேற்றக் கொள்கைகளை தளர்த்தப் போவதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நிரந்தர குடியுரிமை அட்டை குறிப்பிடப்படுகின்ற கிரீன் கார்ட் அட்டையானது அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ்வதற்கும்,
அங்கு தொழிலில் ஈடுபடவும் தனிநபர்களுக்கு உரிமையை அனுமதிக்கும் முகமாக வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெற்ற இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதை, டிரம்ப் கட்டுப்படுத்துவார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கடைபிடித்து வந்த டிரம்ப் தற்பொது இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.