ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த மனுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும் 19 ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரியும் சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாலும் ஜனாதிபதி கையொப்பமிடாதமையால் இந்த திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையிலேயே நாளை மறுதினம் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது