ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை கட்சியின் 73வது ஆண்டு நிறைவு விழாவை முன்நிட்டு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘நாட்டிற்கு வெற்றி – ஒன்றிணைந்து முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டல் வளாகத்தில் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 1951 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் பண்டாரநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.