இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஊழலை ஒழிக்கும் பொற்காலம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என, ஜனாதிபதி வேட்பாளரும், கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் புதிய தொழில்நுட்பத்தினூடாகவே நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப அரசாங்க டெண்டர்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.