இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் நசுக்கப்படுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தெபரவெவவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது போன்ற வன்முறைச் சம்பவங்களினால் அந்த நிறுவனம் காலவரையறையின்றி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மை மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பங்களிப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கமும் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதன் அரசியல் கூட்டாளிகளும் இணைந்து நாட்டை வங்குரோத்து செய்வதற்கு காரணமானவர்களை பாதுகாக்கும் கூட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
ரணிலுக்கும் அநுராவுக்கும் இடையிலான இந்த கூட்டணியை நிராகரிக்குமாறும் அவர் இங்கு வலியுறுத்தினார்.