நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும்.
இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள்.
இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபட்டு தேவியின் மனதை மகிழ செய்யும் வகையில் வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.
நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது ஐதீகம்.