இந்திய விமானப் பாதுகாப்பு அமைப்பான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) அதிகாரிகள் சனிக்கிழமை (19) புது டெல்லியில் விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பினை மேற்கொண்டனர்.
இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு கடந்த ஆறு நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ராஜீவ் காந்தி பவனில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பயணிகளுக்கு இடையூறு மற்றும் விமான சேவைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நிலையான நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு நேற்று சனிக்கிழமை மாத்திரம் 30-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில அச்சுறுத்தல்கள் லண்டன், ஜெர்மனி, கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்தவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த அச்சுறுத்தல் காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகின மேலும், பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.