தற்போதுள்ள வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (10) காலை நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறினார்.
தற்போது பாவனையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை ஸ்மார்ட் கார்டாக அறிமுகப்படுத்தி ஏறக்குறைய 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், பல தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையில் தரவு பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, தற்போது உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தத்தை அரசாங்கம் கண்டறிந்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.