UEFA Champions League போட்டியில் மென்சிட்டி (Man city) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 6 ஆம் இடத்திற்கு ஜுவன்டஸ் (Juventus) அணி முன்னேறியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மென்சிட்டி மற்றும் ஜுவன்டஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இத்தாலியிலுள்ள அலியன்ஸ் (Allianz) மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்த குறித்த இரு அணிகளுக்கும் இப் போட்டி முக்கியதுவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. இந்நிலையில் முதல் பாதியில் மென்சிட்டி அணிக்கு கோலினை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அது கைகூடவில்லை.
இரண்டாவது பாதி தொடங்கி 53 நிமிடம் ஜுவன்டஸ் அணியின் டுசான் வியாஹேவிக் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய ஜுவன்டஸ் அணி 75வது நிமிடத்தில் வெஸ்டன் மெக்கன்னியின் உதவியுடன் இரண்டாவது கோலினையும் பதிவு செய்தது.
இதனால் மென்சிட்டி அணியை 2-0 என இலகுவாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 6மிடத்திற்கு ஜுவன்டஸ் அணி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.