ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி சென்றடைந்த ஜனாதிபதியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இந்நிலையில், தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார். அப்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.